லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

மாநகரம் படத்தில் அறிமுகமாகி, கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து கமலின் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ், இயக்குகிறார். இந்நிலையில் கமலின் 66வது பிறந்தநாளான இன்று (நவம்பர் 07) டைட்டில் லுக் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் கமலின் 232 வது படம் ஆகும்.

முன்னதாக தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 66-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி தனது கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள் உட்பட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், திமுக தலைவர் ஸ்டாலின் என பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

என் பெயரில் என் தந்தை தொடங்கிய அரசியல் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை- நடிகர் விஜய்