இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு “சூரரைப் போற்று” என்று பெயரிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்த இரு படங்களைத் தொடர்ந்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தற்போது, சூர்யா 38 படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், விமானத்திற்கு கீழ் சூர்யா நிற்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

நேற்று சூர்யாவின் என்ஜிகே படத்தின் முதல் சிங்கிள் டிராக் தண்டல்காரன் பாடல் லிரிக் வீடியோ வெளியானது. இதையடுத்து, இன்று சூர்யாவின் 38ஆவது படத்தின் டைட்டில் சூரரைப் போற்று வெளியிடப்பட்டுள்ளது. நாளை காப்பான் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.