அமித்ஷாமகன் ஜெய்ஷா தந்த அவமானம் காராணமாக தான் கூல் கேப்டன் தோனி சுதந்திர தினத்தன்று கட்டாய ஓய்வை அறிவித்துள்ளார். தோனிக்கு மரியாதை செய்யும் வகையில் இறுதியாக ஒரு ஃபேர்வெல் போட்டி கூட நடத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
MS தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிடத்திலிருந்து, ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இரு உலக கோப்பைகளை வென்ற நாயகன் தோனிக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
மேலும் வாசிக்க: கூல் கேப்டன் ‘தல தோனி’ சர்வதேச போட்டிகளில் திடீர் ஓய்வு.. கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்
கடந்த 2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டி தான் தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அதற்கு பிறகு எந்த காரணமும் இன்றி தோனி அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார். ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
2019 உலகக்கோப்பை முடிவடையும் நிலையில், தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. அங்கு ஆளும் கட்சியான பாஜகவிற்கு மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவியது. அங்கிருந்த கள நிலவரமும் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று தெளிவாக உணர்த்தியது.
அந்த நேரத்தில் பாஜகவின் தேர்தல் காலத்திற்கு பொது மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது. இதுவே பல தேர்தல்களில் பாஜகவின் யுக்தியாக உள்ளது. இதனை முன்வைத்தே பாஜக, ஜார்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை அணுகியது.
பலமுறை கட்டாயப்படுத்தியும், பல ஆஃபர்கள் கொடுத்ததும் தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது மோடி தலைமையிலான பாஜக. ஆனால் தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அப்போது பெரும்பாலான தேசிய ஊடகங்களிலும் இந்த செய்திகள் ஆதாரப்பூர்வமாக வெளிவந்தன.
2019 அக்டோபர் மாதம் BCCI செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை நியமித்து அவர் மூலம் மீண்டும் தோனிக்கு மிரட்டல் விடப்பட்டது. அந்த மிரட்டலுக்கும் தோனி பணியவில்லை. இறுதியில் 2019 டிசம்பர் மாதம் நடந்த ஜார்கண்ட் தேர்தலில் முக்தி மோட்சா கூட்டணியிடம் பாஜக தோற்றுபோய் மண்ணை கவ்வியது. இதனால் பாஜகவின் கோபம் தோனியின் மேல் திரும்பியது.
BCCI ஜெய்ஷா தரப்பில் தோனியிடம் இனிமேல் வழியனுப்பு விழாவிற்கு கூட எந்த போட்டியிலும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படமாட்டீர்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டிற்க்கான BCCI ஒப்பந்த பட்டியலில் இருந்து செயலாளர் ஜெய்ஷாவால் தோனி தூக்கி எறியப்பட்டார்.
கிரிக்கெட் ஜாம்பவான், சீனியர் கிரேட்-A வீரருக்கு காண்டராக்ட் கூட வழங்கப்படாமல் நீக்கப்பட்டது BCCI வரலாற்றிலேயே தோனி ஒருவருக்கு தான். இரண்டு உலக கோப்பைகளை வென்றெடுத்த வீரருக்கு ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு, வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவதற்கு காரணம், BCCIயில் வெறும் வாரிசுத் தகுதியில் மட்டும் உயர் பதவியில் உள்ள அமித்ஷா மகன் ஜெய்ஷாவும் அவர் பின்னணியில் மோடி தலைமையிலான பாஜகவும் தான் என்று தெளிவாக கூறப்படுகிறது.
எந்த நாடும் தன்னுடைய வெற்றி வீரனுக்கு செய்யாத துரோகம் தோனிக்கு பாஜகவால் செய்யப்பட்டிருந்தாலும், தோனிக்கான அங்கீகாரம் மக்களிடம் என்றுமே இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் வேதனையை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் வாசிக்க: அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்த தல- சின்ன தல… அதிர்ச்சியில் ரசிகர்கள்