இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க் ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக செய்தி வெளியாகி சர்ச்சையான நிலையில், சிந்துவின் தாயார் விஜயா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பி.வி.சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “என் முடிவு உங்களுக்கு அதிர்ச்சியாகவும் மனதை உடைப்பதாகவும் இருக்கலாம். ஆனால் என் பார்க்கைவில் இருந்து பார்த்தால் நான் எடுத்துள்ள முடிவின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்! நீங்களும் அதற்காக ஆதரிப்பீர்கள்.

பேட்டிமிண்டனில் தோற்கடிக்கலாம்; ஆனால் இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும். இன்றுதான் எனக்கு கண் திறந்தது. அதனால் எனது ஓய்வு குறித்த அறிவிப்பை இந்த நெகட்டிவிட்டி சமயத்தில் எடுத்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கான வாய்ப்பு அளித்துள்ளேன்.

அதனால் இந்த டென்மார்க் தொடரிலிருந்து நான் ஓய்வு பெறவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவிலிருந்து இவ்வுலகைப் பாதுக்காக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவால் பி.வி.சிந்து டென்மார்க் ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பி.வி.சிந்துவின் ட்வீட் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அவரது தாயார் விஜயா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “பி.வி.சிந்துவின் ட்வீட்டை ஊடகங்கள் முழுமையாக படிக்காமல் அவர், பேட்மின்டன் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக செய்திகளை வெளியிட்டுவிட்டன. அவர், சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார். தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பி.வி.சிந்து விளையாடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதிமுறை பின்பற்றப்படுகிறதா- ஹர்பஜன்சிங் ஆவேசம்