அரசியல் தமிழ்நாடு வணிகம்

ஆளும் அதிமுக அரசின் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் ரெய்டு; ரூ.700 கோடி ஆவணங்கள் மீட்பு

ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கி இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு பகுதியில் பிரபலமானது ஸ்ரீபதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஈரோடு தங்கப்பெருமாள் வீதியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக, ஸ்ரீனிவாசன், சேகர் மற்றும் பூபதி ஆகியோர் உள்ளனர்.

இந்நிறுவனம், ஆளும் அதிமுக அரசின் முக்கிய ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறது. ஏராளமான அரசுக்கு சொந்தமான கட்டுமானப் பணிகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேலும், கோவை, சேலம், ஈரோடு, மதுரை பகுதிகளிலும் கிளைகளை நிறுவியுள்ளது.

அதுமட்டுமின்றி, கல்குவாரி தொழில், திருமண மண்டபம், டிராவல்ஸ், பேருந்து சேவை, மசாலா பொருட்கள் தயாரிப்பு என பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்துவருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள், ஸ்ரீபதி நிறுவனத்துக்கு செர்ந்தமான 50 இடங்களில், ஒரே நேரத்தில் கடந்த 14 ஆம் தேதி திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை 4 நாட்களாக நீடித்த நிலையில், மொத்தமாக 21 கோடி ரூபாய் பணம் மற்றும் ரூ.700 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுதை சாணத்தால் போலி மசாலா தயாரிப்பு; இந்து அமைப்பு தலைவர் கைது

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.