இயற்கை தமிழ்நாடு

நிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை

நிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், வருகின்ற 25 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் வாழ்வியல்

கனமழை: பழைய கட்டடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, மேலும் வாசிக்க …..

இயற்கை

தமிழகத்தில் அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் மேலும் வாசிக்க …..

இயற்கை

14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருமழை தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு மதுரை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணிநேரத்தில் அரியலூர் திருச்சியில் அதிகபட்சமாக 11 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. கரூரில் 10 செமீ மழையும், பெரம்பலூரில் 6 செமீ மேலும் வாசிக்க …..

இயற்கை

அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று.. சுட்டெரிக்கும் வெயில்- வானிலை மையம்

தமிழகத்தில் இன்றைக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும். அடுத்த 3 நாளைக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மேற்குவங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்த சூப்பர் புயலான ஆம்பன் பெரிய அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் சேதங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதன் தாக்கம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்புயல் தமிழகத்தில் பெரிய சேதங்களை ஏற்படுத்தாவிட்டாலும், ஆம்பன் புயல் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழக வானிலை மையம் மேலும் வாசிக்க …..