2015 ஆண்டை போல இந்த 2021 ஆண்டும் பல தெருக்கள் தண்ணீரில் முழ்கும் அபாயம் உள்ளதா..

கடந்த 6 நாட்களாக அமைதியாக பெய்து வந்த மழை நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்து வருவதால்.. இதன் காரணமாக 23 செமி மைலாப்பூரிலும் , 21 செமி அம்பத்துரிலும், 25 செமி நுங்கம்பாக்கதிலும் பதிவானதாக வானிலை மைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன..

மேலும் சென்னையில் அனைத்து மெட்ரோ சேவைகளும் மழை நீர் தண்டவாளத்தில் பல இடங்களில் சூழ்ந்துள்ளதால் தற்போது முடங்கி விட்டன.. இதன் காரணமாக தாம்பரம் மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யபட்டு விட்டன..

சென்னையில் திநகர் உள்ளிட்ட அல்மோஸ்ட் அனைத்து சுரங்க பாலங்கள் தண்ணீரால் முடப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 11 மணி அளவில் புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரிகள் திறப்பால் சென்னையில் நதி நீர் செல்லும் கரையோரம் வெள்ள அபாயம் உள்ளதாக அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

சென்னை சுற்றியுள்ள அனைத்து ஏரி நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருவதால் சென்னைக்குள் வாகனம் எடுத்து செல்வோருக்கும், சென்னையில் கரையோரம் வசிக்கும் உறவினர்கள் நணபர்களுக்கு.. இணைப்பில் உள்ள தோழர்கள் தோழிகள் உடனடியாக அவர்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தவும்..

மழை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என சென்னைக்கு #redalert வானிலை நிலையம் வேறு தந்துள்ளதால்.. மழையின் கை பிடியில் #சென்னை மறுபடியும் என்பதால்..

சென்னை பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் இன்றும் மழை தொடர்ந்தால் சென்னை நாஸ்தி.. ஆக 2015 போல் அப்போதைய #அதிமுக அரசு வெள்ளம் வந்த பின் வேடிக்கை பார்த்ததைப் போல பார்க்காமல்..

தற்போதைய #திமுக அரசு வெள்ளம் வருமுன்னே உடனடியாக களத்தில் போர்க்கால நடவடிக்கையாக இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. மாநகராட்சியின் உதவி எண்கள் தரப்பட்டுள்ளன பாதிக்கபட்டவர்களுக்கு தந்து பயன்படுத்திக் கொள்ளவும்..

https://www.facebook.com/savenra/posts/7311793412179852