கேரளா சமூகம் தமிழ்நாடு

கேரளாவில் பரவிவரும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும்- தமிழக சுகாதாரத்துறை

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம் என தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்து உள்ளார். கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதன் எதிரொலியாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேரளாவிலிருந்து பறவைகள் கொண்டுவர தடை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வழியில் கீழ் நாடுகாணி, தாளூர், எருமாடு, பாட்டவயல், மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணியில் இருந்து விலகல்; சிக்கலில் பாஜக ஆட்சி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) அதிரடியாக வெளியேறி உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 31வது நாளை கடந்து செல்கிறது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து வருகிறது. இந்த வேளாண் சட்டங்கள் எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி பாஜகவின் கூட்டணி கட்சியினரையும் கடும் அதிருப்தியில் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்த விவசாயிகள்; நாளை உண்ணாவிரதப் போராட்டம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, வாகனங்களை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர். இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று (டிசம்பர் 13)நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கப்படும் என்றும், டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

நான் முதலில் விவசாயி மகன்; விவசாயிகளுக்காக பதவியை துறந்த பஞ்சாப் டிஐஜி

நான் விவசாயி மகன் எனக் கூறி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் 18 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், முதலமைச்சர்கள் என பலரும் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

விவசாயிகள் போராட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவால் கலக்கத்தில் மோடி

விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறும் என ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி அறிவித்துள்ளது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் தெரிவித்து வருகிறது. மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

தீவிரமடையும் டெல்லி முற்றுகை; டிராக்டர் அணிவகுப்பில் கிளம்பிய பஞ்சாப் விவசாயிகள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1,000 கிராமங்களில் இருந்து சுமார் டிராக்டர் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் டெல்லியின் எல்லைகள் முற்றுகை, சுங்கச்சாவடி முற்றுகை, தேசிய மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை சமூகம் தேசியம் பாஜக விவசாயம்

அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.. விவசாயிகள் உறுதி

மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் அணிதிரண்டு போராட்டம் நடத்தி டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். டெல்லி நோக்கி போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை உத்தரப் பிரதேசம், மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை கட்சிகள் தேசியம் பாஜக விவசாயம்

விவசாயிகள் விரோத மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிரடி

மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்த மசோதா 2020 மற்றும் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களையும் ரத்து செய்திடக் கோரி நவம்பர் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம் விவசாயம்

போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு… டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பதால், மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை சட்டம் தேசியம்

வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஹரியானா போலீசார் தடைகளை ஏற்படுத்தி தடுத்து கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், அந்த சட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகளால் அம்மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ளது. பஞ்சாப் மேலும் வாசிக்க …..