பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1,000 கிராமங்களில் இருந்து சுமார் டிராக்டர் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ளனர்.

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் டெல்லியின் எல்லைகள் முற்றுகை, சுங்கச்சாவடி முற்றுகை, தேசிய நெடுஞ்சாலைகளை அடைத்தல் என போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இன்று டெல்லி- ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு, விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.

டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கையை மேலும் வலுப்படுத்த தமிழகம், ராஜஸ்தான், பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கள் டெல்லியை முற்றுகையிட தொடர்ந்து அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.

அதன் ஒருபகுதியாக, பஞ்சாப் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் மட்டும் 1,000 கிராமங்களில் இருந்து சுமார் 1,300 டிராக்டர், தள்ளு வண்டிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களுடம், சுமார் 30,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ளனர். 

இதுதொடர்பாக பஞ்சாப் விவசாயிகளை ஒருங்கிணைத்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும் கேஎம்எஸ்சி தலைவர் சத்னம் சிங் பன்னு கூறுகையில், “அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், தரன் தரன், ஜலந்தர், ஹோஷியார்பூர், பெரோஸ்பூர் மற்றும் மோகா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போராட்டக்காரர் இந்த வாகனத்தில் உள்ளனர்.

30,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இருப்பதால் டெல்லிக்குள் அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்வோம்” எனத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளது மத்திய பாஜக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவால் கலக்கத்தில் மோடி