கொரானா சமூகம் தேசியம் பாஜக

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்; தேசிய அளவில் டிரெண்டான #ResignModi

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று #ResignModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாகவும், மேலும் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மத்திய அரசு அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டெல்லியில் முதல்வரை விட துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 70 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா என்பதில் மேலும் வாசிக்க …..

உலகம்

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து போராட்டக்களமானது வங்கதேசம்- பலர் பலி மற்றும் படுகாயம்

பிரதமர் மோடியின் வங்கதேச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கதேச விடுதலைப் போரின் 50-வது ஆண்டு விழா மற்றும் ‘வங்கதேசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஆனால் வங்கதேசத்துக்கு பிரதமர் மோடியை அழைத்ததற்கு மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு தேசியம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க உத்தரவு- தேர்தல் ஆணையம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகும் பிரதமர் மோடியின் புகைப்படம் அரசு சார்ந்த திட்டங்களில் இடம்பெற்றுள்ளதாக மாநில மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் பாஜக

3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை- டாப்சி கிண்டல்

வருமான வரித்துறை நடத்திய சோதனையை குறிப்பிட்டு, ‘3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது’ எனக் கிண்டலடித்து நடிகை டாப்ஸி ட்விட்டரில் பதிவிட்டது வைரலாகி உள்ளது. இயக்குனர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் ஆகியோர் இணைந்து கடந்த 2011 ஆம் ஆண்டு ‘பேன்டன்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு மற்றும் டிஸ்டிரிப்யூஷன் நிறுவனத்தை நடத்திவந்தனர். இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. இந்நிலையில், வருமான வரி மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதாவின் 21வது பிறந்தநாள் இன்று

மருத்துவம் படிக்கும் கனவுகளோடு அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் 21வது பிறந்த நாள் இன்று. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய மோடி அரசு அறிவித்த நாள் முதல் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு சிதைந்து, பலரும் வேதனையில் ஆழ்ந்து வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உரிய தகுதி இருந்தபோதும், பாடத்திட்டத்தில் இல்லாத மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

100வது நாளை எட்டிய ‘டெல்லி சலோ’ போராட்டம்; இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலி

வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தமிழ்நாடு

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு விளக்கு 21,666 ரூபாய்- RTI அதிர்ச்சி தகவல்

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666 என்று மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணியை மோடி அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்கள் இதற்குத் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. இதில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மட்டும் தான் ஆரம்பகட்ட அளவை எட்டியுள்ளது. மேலும் பல இடங்களில் மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் தேசியம் விவசாயம்

அமைதியாக போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை செய்வது வேதனை- மலாலா யூசுப்சாய்

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி செயல்பாட்டாளரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் வேதனை தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச பின்னணி பாடகி ரிஹானா, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த பட்டியலில் தற்போது மலாலா யூசுப்சாய் இணைந்துள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்து மலாலா மேலும் வாசிக்க …..

கட்சிகள் சமூகம் தமிழ்நாடு திமுக தேசியம் வணிகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தவிக்கும் பொதுமக்கள்; தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59, டீசல் விலை ரூ.85.98 மேலும் வாசிக்க …..