உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் சமூகம் தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு தடைகோரிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து, தமிழக அரசு 15 நாட்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டாம்- உயர்நீதிமன்றம்

அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 7.5% இட ஒதுக்கீடு வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் முலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு மருத்துவம்

நீட் தேர்வில் தொடரும் முறைகேடு; போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி

மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவி, மற்றும் பல் மருத்துவராக உள்ள அவரது தந்தை மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். கலந்தாய்வில் அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சான்றிதழ் அளித்திருந்தார். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பில் அவரது கலந்தாய்வு அழைப்புக் கடிதம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை சோதனை செய்ததில் அவர் போலிச் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

நிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

நிவர் புயல் கனமழை காரணமாக நாளை (நவம்பர் 24) நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைத்தன. அதில் 399 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து பொது கலந்தாய்வு மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக் குறைவு. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தெலுங்கானா

தமிழக மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முறைகேடு சர்ச்சை

தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில், தெலுங்கானாவை சேர்ந்த 34 பேர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிற மாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாடுபடும் பாஜக அரசு- தலைவர்கள் கண்டனம்

மத்திய அரசின் 11 மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்டைத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் தேசியம் பாஜக

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு- வலுக்கும் கண்டனங்கள்

மத்திய பாஜக அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ‘INI-CET’ எனும் தனி நுழைவுத் தேர்வை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து, இந்த கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்புகளில் சேர ‘INI-CET’ எனும் பெயரில் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கு ஆளுநர் விரைந்து மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம்

நீட் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாரு காரணமாக நிறுத்தம்

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று (அக்டோபர் 27) தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாரு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 – 21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதாரச் மேலும் வாசிக்க …..