கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- பிரதமர் மோடி

கொரோனா பரவலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் 2வது அலை மார்ச் மாதத்தில் மீண்டும் வேகமெடுத்து, கடந்த 2 மாதமாக பாதிப்பு கடுமையாக உள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

நேரடி எழுத்துத் தேர்வு மூலம் பருவத் தேர்வுகள் நடத்தப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் நடத்தப்பட்டது போலவே நேரடி எழுத்துத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பருவத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சுமார் 1 லட்சம் மேலும் வாசிக்க …..

கல்வி கொரானா சமூகம் தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் அலகுத் தேர்வு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், கொரோனா தொற்று குறைந்தவுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் 12 மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி- தமிழக அரசு

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வந்தன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனித்து பாடம் கற்க முடியாத சூழல் ஏற்பட்டதால், 8 மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு- ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வந்தன. அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

அஞ்சலக தேர்வை தமிழிலும் எழுதலாம்; மத்திய அரசு பல்டி

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சல் துறையில் உள்ள கணக்கர் (Accountant) வேலைக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தமிழ்நாடு தேசியம் வேலைவாய்ப்புகள்

காற்றில் பறந்த மத்திய அமைச்சர் வாக்குறுதி.. தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். அஞ்சல்துறை நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் கடிதங்களை நாட்டின் எந்த ஒரு இடத்திலிருந்தும் எந்த ஒரு இடத்திற்கும் பட்டுவாடா செய்து வருகிறது.. அஞ்சல் துறையில் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, தனியார் பள்ளிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடங்கள் கற்பிப்பது மிக தாமதமாகவே ஆன்லைனில் தொடங்கியது. பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள் என்பதால், ஸ்மார்ட்போன் இல்லாத மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப் பயிற்சி.. இன்று விண்ணப்பம் தொடக்கம்

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு இன்று (டிசம்பர் 11) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎல் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும். இதில், தமிழக அரசு சார்பில் ஆட்சிப்பணித் தேர்விற்க்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளை மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் சட்டம்

நீட் தேர்வு விவகாரம்.. 6 மாநில அரசுகளின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என, நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா அதிகரித்து வரும் இந்த சூழலில், நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரையும் நடக்கும் என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல், வெள்ள பாதிப்பு என பல்வேறு பாதிப்புகளுக்கு இடையே நீட் மற்றும் ஜேஇஇ மேலும் வாசிக்க …..