அரசியல் உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் சமூகம் தமிழ்நாடு

சூரப்பாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை; தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் தடை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் புகார்; தமிழக முதல்வருக்கு ஆளுனர் திடீர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் புகார் குறித்த விசாரணையை உடனே நிறுத்த தமிழக முதல்வருக்கு ஆளுனர் பன்வாரிலால் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, விதிகளை மீறி அவரது மகள் உள்பட பலருக்கு பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சுமார் ரூ.280 கோடி ஊழலில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி சமூகம் தமிழ்நாடு

தனக்கு எதிரான விசாரணை குழுவை சந்திக்க தயார்- துணைவேந்தர் சூரப்பா

தனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அரியர் தேர்வில் மோசடி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் என தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்று சூரப்பா கூறியது, மேலும் பரபரப்பை மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

துணைவேந்தர் சூரப்பா கடிதம் சர்ச்சை: ‘அண்ணா பல்கலைக்கழகத்தை காப்போம்’ என திமுக போர்க்கொடி

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி நிதி தேவையை பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்ய முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

சர்வதேச போட்டியில் இந்தியா வெற்றிபெற உதவிய நடிகர் அஜித்

நடிகர் அஜித் தற்போது “விஸ்வாசம்” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெரும் நிலையில் தற்போது படத்திற்கு அஜித் டப்பிங் பேசி வருகிறார். ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஆளில்லா விமானங்களை இயக்கும் சர்வதேச போட்டியில் நடிகர் அஜித் ஆலோசகராக இருந்த சென்னை பல்கலைகழக மாணவர்கள் (MIT) தயாரித்த ஆளில்லா விமானம் 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தக் குழுவுக்கு உறுதுணையாக மேலும் வாசிக்க …..