நடிகர் அஜித் தற்போது “விஸ்வாசம்” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெரும் நிலையில் தற்போது படத்திற்கு அஜித் டப்பிங் பேசி வருகிறார். ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஆளில்லா விமானங்களை இயக்கும் சர்வதேச போட்டியில் நடிகர் அஜித் ஆலோசகராக இருந்த சென்னை பல்கலைகழக மாணவர்கள் (MIT) தயாரித்த ஆளில்லா விமானம் 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தக் குழுவுக்கு உறுதுணையாக இருந்த நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித், ரேஸ் கார் இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் ஏரோ மாடலிங் (Aero Modelling) தயாரிப்புகளில் ஆர்வம் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த UAV Medical Express 2018 போட்டியில் இறுதிச் சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில் அஜித் ஆலோசகராக உள்ள தக்‌ஷா அணி 2-வது இடம் பிடித்திருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் தெரிவிக்கின்றனர்.

ஆளில்லா விமான வடிவமைப்பு போட்டியில் தக்‌ஷா அணி இரண்டாவது இடத்தை பிடித்ததை தொடர்ந்து, அந்த அணியின் வெற்றித் சான்றிதழுடன் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.