கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். குழந்தைகளின் உடல் நலனை மனதில்கொண்டு நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், ‘இல்லம் தேடிக் கல்வி’ பயிற்சிப் பணிமனை, மற்றும் இத்திட்டத்தில் இணையும் தன்னார்வலர்களுக்கான மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

குமரி வள்ளுவர் சிலை முதல் சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. மாரத்தான்- 9 வயது சிறுவன் சாதனை

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 700 கிலோ மீட்டர் தொடர் ஓட்ட பயணம் மேற்கொண்ட சிறுவன் சர்வேசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தாம்பரத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் சர்வேஷ். தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பெண்மணி ஒருவரின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பார்த்துள்ளான். தானும் அதேபோல் சாதிக்க மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் சமூகம் தேசியம்

ஏழை மாணவர்களுக்கு வழங்குவது அரசின் கடமை; தனியார் பள்ளிகளின் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம்

ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவது அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவியர் ஆன்லைனில் கல்வி பயில தேவையான டிஜிட்டல் கருவிகளை டெல்லி அரசு, பள்ளி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

NEP 2020 கட்டாயம் செயல்படுத்த வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகுருசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் எழுதியுள்ள கடிதத்தில், “ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கமும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேசிய மேலும் வாசிக்க …..

அதிமுக கல்வி சமூகம் தமிழ்நாடு

கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்; பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு

கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாமிநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணிபுரிந்து வந்த அங்கமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழகத்தில் மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் திமுக தேசியம் பாஜக

கல்வித்துறையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம்- 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித் துறையை நிருவகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

PSBB பள்ளியில் சீட் வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; மதுவந்தி மீது காவல் நிலையத்தில் புகார்

பத்ம சேஷாத்திரி பள்ளியில் யுகேஜி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் லஞ்சம் மோசடி செய்தாக கூறி ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள பிரபலமான பத்ம சேஷாத்ரி பள்ளி (PSBB) ஆசிரியர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

நீட் தேர்வில் முறைகேடு; உச்ச நீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்

நாடு முழுவதும் கடந்த 12 ஆம் தேதி நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் வெளியாகி முறைகேடு நடந்திருப்பதால், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு தேசியம் மகராஷ்டிரா

நீட் தேர்வு மாணவர்களுக்கு நன்மையா தீமையா.. தமிழ்நாட்டை பின்பற்றும் மகாராஷ்டிரா அரசு

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில அரசும் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தார். ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்ததையடுத்து, நீட் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

நீட் தேர்வின் சாதகங்களை ஏன் சொல்லவில்லை.. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!

நீட் தேர்வை விமர்சித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி, அதன் பயன்பாடுகளைச் சுட்டிக்காட்ட தவறிவிட்டது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு பயிற்சி முறை (கோச்சிங்) மாணவர்கள் மத்தியில் கற்றலை முழுவதுமாக மாற்றிவிட்டது என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்கிறேன். பிளஸ் 2 பொதுத்தேர்வை பொறுத்தவரை இது உண்மைதான். ஆனால், நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் வருவதற்கு முன்பாகவே பள்ளிகளில் சிறப்பு பயிற்சி முறை மேலும் வாசிக்க …..