சட்டம் தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: கணினிப் பொறியாளர் தினேஷ் குமார் தற்கொலை வழக்கில் மறு விசாரணை

கொடநாடு கணினிப் பொறியாளர் தினேஷ் குமார் தற்கொலை வழக்கை, தற்போது சந்தேக மரணம் என தனிப்படை காவல்துறை வழக்குப்பதிவு செய்ததுடன், வழக்கை மீண்டும் மறு விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அந்த வழக்கை நீலகிரி காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் அரசு தரப்பு மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு தேசியம் வணிகம் வர்த்தகம்

செஸ் வரியை கைவிட்டால், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்: நிதியமைச்சர் தியாகராஜன்

ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆதரவு அளிக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என சொல்லியது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நிலைப்பாட்டை மாற்றி பேசுவதாக அதிமுக மற்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல் செப்டம்பர் 2 ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்திலும் தமிழ்நாடு மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

கே.சி.வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

கே.சி.வீரமணி வீட்டில் நடந்த சோதனையில், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், அமெரிக்க டாலர்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் சுமார் 275 யூனிட் ஆற்று மணல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரைத் தொடர்ந்து, மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு; ரெய்டில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை சேர்த்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் வணிகவரி மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு திமுக

கல்வெட்டுக்களின் வரலாறு!

ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை 2001 ஆண்டில் இழந்த ஜெயலலிதா அப்போது சோழிகளை உருட்டிய நம்பூதிரிகள் பேச்சை கேட்டு மெரினாவில் இருந்த கண்ணகி சிலையை இரவோடு இரவாக தூக்கி தூர எரிந்தார். 2011 ஆம் ஆண்டில் சவால் விட்டு மீண்டும் அதே இடத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறுவியதும் திமுக தான்.. கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தை கலைஞரின் பெயரை தூக்கி எறிந்துவிட்டு எம்ஜிஆர் நடத்திய ஆட்சியில்.. மீண்டும் முதல்வரானால் வள்ளுவர் கோட்டத்தில் தான் பதவி மேலும் வாசிக்க …..

அரசியல் சினிமா தமிழ்நாடு

கவிஞர் புலமைப்பித்தன் மறைவு; அரசியல் தலைவர்கள் அஞ்சலி

அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான புலமைப்பித்தன், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர். சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த கவிஞர் புலமைப்பித்தன், சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 08 காலை உயிரிழந்தார். மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி

கொடநாடு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணையை தொடங்கியுள்ளது தமிழ்நாடு காவல்துறை. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்று விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மேல் விசாரணைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே கொடநாடு வழக்கின் சாட்சியான அனுபவ் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு திமுக

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் மு.மு.அப்துல்லா

திமுகவின் மு.மு.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்ததால் அந்த இடத்துக்கு தமிழகத்தில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் மேலும் வாசிக்க …..

சட்டம் தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- தனிப்படை குழு அமைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடுஎஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 02) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை தொடங்கியது. மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்; தலைவர்கள் நேரில் அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்கிற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கடந்த 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேலும் வாசிக்க …..