மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘க/பெ. ரணசிங்கம்’ படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை நடித்து முடித்தார். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதி, தொடர்ந்து கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், க/பெ. ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல திரைப்படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார்.

இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ. ரணசிங்கம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாரக உள்ளது. தண்ணீர் பிரச்சினையை மிக ஆழமாக பதிவிடும் இந்த திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=UkYwGi2v1Bo” width=”680″ height=”380″ autoplay=”yes” title=”க/பெ ரணசிங்கம் டீஸர் “]

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், திறந்தால் வரும் மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும், என திரைத்துறையில் பல கேள்விகள் இருக்கும் நிலையில், சமீபத்தில் OTT தளத்தில் வெளியான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைப் போலவே ‘க/பெ ரணசிங்கம்’ படமும் நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க: Godman வெப்சீரிஸ் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திரௌபதி பட இயக்குனர்

இப்படத்தை தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இரண்டு முன்னணி OTT தளங்களுக்கு விற்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் மேலும், பிரபல ஊடக ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, சன்முகம் முத்துசாமி, அருண்ராஜா காமராஜ், பவானி ஶ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.