கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் பயன்படுத்தப்படும் N95 முகக்கவசங்களால் பயனில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்படாமல் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக் கவசம், சானிடைசரை மக்கள் அதிகம் பயன்படுத்திவருகின்றனர். மத்திய, மாநில அரசுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, முகக் கவசங்கள் அணிவது, போதிய சரீர இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

அதிலும் குறிப்பாக, வால்வ் பொருத்தப்பட்டுள்ள N95 முகக்கவசங்கள் அதிக திறன் வாய்ந்தவை, இதன்மூலம் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கலாம் என்று பொதுமக்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதனைப் பொது மக்கள் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட N95 முகக் கவசங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில்,

அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களை தவிர்த்து பொதுமக்கள் N95 வகை முகக் கவசங்களை உபோயிக்க வேண்டாம், இதன்மூலம் கொரோனா பரவுவதை முற்றிலும் தடுக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பருத்தி துணி மூலம் தயாரிக்கப்பட்ட முகக் கவசத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: முகக்கவசத்தை தொட்டால் கொரோனா தொற்று; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

N95 முகக் கவசம் என்பது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்திருப்பவரை வான்வழி துகள்களிலிருந்தும், முகத்தை மாசுபடுத்தும் திரவத்திலிருந்தும் பாதுகாக்கப் பயன்படுகிறது. N-95 முகக் கவசங்கள் குறைந்தது 95% வான்வழி துகள்களை வடிகட்டுகின்றன. இந்த சுவாசக் கருவிகள் முதன்மையாக சுகாதாரப் பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டுமான இடங்களில் தூசித் துகள்களிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.