Uncategorized

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அதிர்ச்சியில் தமிழகம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.   இது, தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு முடிவுக்கு தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   மேலும் இந்த அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.   தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் மேலும் வாசிக்க …..

Uncategorized சமூகம் தமிழ்நாடு

உதவி ஆய்வாளர் பதவிக்கு கீழே உள்ள போலிசார் செல்போன் பயன்படுத்த தடை : டிஜிபி அலுவலகம்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செல்போன் பயன்படுத்த கூடாது என்று அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களுக்கும் டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   காவலர்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதாகவும் வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக புகார் எழுந்தது.   இதனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, காவலர்கள் செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுகிறது.   இதனையடுத்து உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மேலும் வாசிக்க …..

Uncategorized

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தது வருகிறது மத்திய குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு நேரில் சென்று ஆய்வு செய்வதாக அறிவித்திருந்த நிலையில் இன்று 7 பேர் கொண்ட குழு அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான குழு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.   அங்கிருந்து 13 இடங்களில் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். குளத்தூர், புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, வடுக்கப்பட்டி, பரமாநகர் போன்ற 13 இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். ஏற்கனவே மேலும் வாசிக்க …..

Uncategorized

“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” – விஷாலை வம்பிலுக்கும் நடிகர் சிம்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தனக்கு இருக்கும் மோதல்களுக்கு, தான் நடித்து வரும் புதிய படத்தின் பாடல் மூலம் நடிகர் சிம்பு பதிலளிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்துள்ளன. ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பட விவகாரம் தொடர்பாக, அப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். சிம்பு தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சிம்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் மேலும் வாசிக்க …..

Uncategorized

சிபிஐ விவகாரம் சிவிசி விசாரணை அறிக்கைக்கு அலோக் வர்மா பதில் தாக்கல்

சிபிஐயில் லஞ்சப் புகார் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) விசாரணை அறிக்கைக்கு அலோக் குமார் வர்மா உச்ச நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்தார்.  சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, தற்காலிக சிபிஐ இயக்குநரை நியமித்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் மேலும் வாசிக்க …..

Uncategorized

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அடிதடி கைகலப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய போது கைகலப்பு ஏற்பட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.  நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக எம்பிக்கள் மீது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி அளவில் இலங்கை பாராளுமன்ற அமர்வு தொடங்கியது.  இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்புக்கு கோர்ட் தடை விதித்ததுடன் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.  இன்று 2 வது மேலும் வாசிக்க …..

Uncategorized

மத்தியப் பிரதேச நிர்வாகத்தை சரி செய்ய ஹூலுவாடி ஜி ரமேஷை அங்கு அனுப்ப கொலீஜியம் முடிவு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹூலுவாடி ஜி ரமேஷ் 2-ஆவது நீதிபதியாக உள்ளார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நிர்வாகம் மேலும் சிறப்பாக நடைபெற ஹூலுவாடி ஜி ரமேஷை அங்கு பணிமாற்றம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஹூலுவாடி ஜி ரமேஷ் தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மேலும் வாசிக்க …..

Uncategorized வேலைவாய்ப்புகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . பணி மற்றும் காலியிடங்கள்: Technician Apprenticeship Training, Trade Apprenticeship Traning – 441  பயிற்சி காலம்: 12 மாதங்கள் பயிற்சி இடங்கள்: Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Assam, Bihar, Jharkhand, Manipur, Mizoram, Nagaland, Odisha, Sikkim, Tripura & West Bengal பயிற்சி அளிக்கப்பட உள்ள துறைகள்: Electrical, Instrumentation, Civil, Electrical & மேலும் வாசிக்க …..

Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஒயிட்வாஷ் மேற்கிந்திய தீவுகள் ., இந்தியா 2-0 வெற்றி

ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடந்த இரண்டாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என்று தொடரை வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, தனது முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சில் இந்திய அணி 367 ரன்களை எடுத்தது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் வாசிக்க …..

Uncategorized சட்டம் தமிழ்நாடு வாழ்வியல்

சோதனையில்  தங்கம் , ஹவாலா டாலர் பிடிபட்டது

இலங்கையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (32) என்பவர் அணிந்திருந்த ஷூ வித்தியாசமாக இருந்தது. அவரது ஷூக்களை கழற்றி அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதன் அடிபாகத்தில் ரகசிய அறை வைத்து அதில் தங்க கட்டிகள், தங்க வளையம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மொத்தம் 300 கிராம் தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹9 மேலும் வாசிக்க …..