ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடந்த இரண்டாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என்று தொடரை வென்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, தனது முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சில் இந்திய அணி 367 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி 127 ரன்களை மட்டுமே எடுக்க, இந்தியாவுக்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய தொடக்க வீரர்கள் கே. எல். ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் தலா 33 ரன்கள் எடுக்க விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை இந்தியா எட்டியது. ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக ராஜ்கோட்டில் நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியசாத்தில் இந்தியா வென்றது. இதனால் 2-0 ஒயிட்வாஷ் மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஆகியுள்ளது .

ஸ்கோர் விவரம் :
WI 311, 127 ;
IND 367, 75/0 (16.1 Ovs)
சிறந்த ஆட்ட நாயகன் : உமேஷ் யாதவ்
சிறந்த தொடர் நாயகன் : பிரித்திவி ஷா