தமிழ் ஸ்பெல்கோ தனது மில்லியன்+ வாசகர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு 2021 அருகி பெருக வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறது
கடன் கொடுத்து அவமானப்படுத்திய ஆன்லைன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய இளைஞர், ஆன்லைன் ஆப் நிறுவனம் செய்த அவமானச் செயலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) என்ற ரங்கநாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார். விவேக் தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவிற்க்காக தனியார் ஆன்லைன் ஆப் மூலம் 4000 மேலும் வாசிக்க …..
சிந்து சமவெளி நாகரிகத்தில் மாட்டிறைச்சியே மக்களின் விருப்ப உணவு; ஆய்வுத் தகவல்
சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட இறைச்சிகளை விருப்ப உணவாக உட்கொண்டுள்ளனர் என ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழைய தொன்மையான நாகரிகம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழி அறிஞர், தொல்லியல் துறையினர், வரலாற்று பேராசிரியர்கள் என பலரும் சிந்து சமவெளி பற்றிய தங்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் வாசிக்க …..
ஆந்திராவை அச்சுறுத்தும் மர்ம நோய்; நோயாளிகளின் ரத்தத்தில் ஈயம், நிக்கல் கலப்பு
ஆந்திர மாநிலம் ஏலூரு பகுதியில் அதிகரித்து வரும் மர்ம நோயின் காரணம் குறித்து, ஆய்வு செய்து வரும் மருத்துவர்கள், நோயாளிகளின் ரத்தத்தில் அதிக அளவு ஈயம், நிக்கல் கலந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற நகரின் பல இடங்களில் இதுவரை 570 பேர் மர்ம நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டடவர்கள் அனைவரும், சாதாரணமாக இருக்கும் சமயத்திலேயே மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு, மேலும் வாசிக்க …..
தமிழகத்தில் அதிரடியாக ரூ.50 உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரெனெ ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல் மேலும் வாசிக்க …..
மோடி வருகைக்காக வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிப்பு
பிரதமர் மோடியின் வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நவம்பர் 30 ஆம் தேதி தேவ் தீபாவளி பண்டிகைக்காக 8 மாதங்களுக்கு பிறகு செல்கிறார். முன்னதாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய் சிலை திறப்பு நடந்த போது மோடி வாரணாசிக்கு சென்றிருந்தார். அப்போது வாரணாசியில் உள்ள குடிசைவாசிகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் மேலும் வாசிக்க …..
சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம்- தெற்கு ரயில்வே
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தற்போது குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 10 முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் கடைசி ரயில் வரையிலும் பெண்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் மேலும் வாசிக்க …..
சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை: கேரள அரசு
பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பரப்புதல், படங்களை பதிவேற்றம் செய்தல், ஷேர் செய்தல், அல்லது மேலும் வாசிக்க …..
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை; மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி மதுரை மேலும் வாசிக்க …..
கனமழை: பழைய கட்டடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, மேலும் வாசிக்க …..