தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரெனெ ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.660க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் ரூ.610 ஆக இருந்து வந்தது. இந்நிலையில் டிசம்பர் 01 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ.62 அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு பின் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,293க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிசம்பர் 31 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் கல்லூரிகள் திறப்பு தேதி அறிவிப்பு