அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தற்போது குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 10 முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் கடைசி ரயில் வரையிலும் பெண்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டம் மிகுந்த நேரமான காலை 7 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் 7.30 மணி வரை பெண்கள் பயணிக்க அனுமதி இல்லை. இந்த நேரங்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

சென்னை புறநகர் ரயில் பயணங்களில் கவனிக்க வேண்டியவை: சீசன் டிக்கெட் மற்றும் ரயில் நிலையங்களில் டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.

12 வயது வரை உள்ள குழந்தைகள் பெண்களோடு பயணிக்கலாம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் பெண்கள் பயணிக்க எந்தவித நேரத் தடையும் இலைல.

முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளார் அதற்கான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah