அரசியல் தமிழ்நாடு திமுக தேசியம் பாஜக

பொதிகை மூலம் சமஸ்கிருதம் திணிப்பு… வலுக்கும் எதிர்ப்புகள்

பொதிகை தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பாக உள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. அகில இந்திய அளவில் அனைத்து மாநில மொழிகளிலும் தூர்தர்ஷன் சேவை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் பிரசார் பாரதி இந்த சேவைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரசார் பாரதி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டெல்லி மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக் குறைவு. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாடுபடும் பாஜக அரசு- தலைவர்கள் கண்டனம்

மத்திய அரசின் 11 மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்டைத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனையா.. மு.க.ஸ்டாலின் கண்டனம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தடை போடுவதை கைவிட்டு, தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை பாஜக அரசு கைவிட வேண்டும் என விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு, ‘தமிழுக்குத் தனியொரு விதி’ உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மேலும் வாசிக்க …..

கட்சிகள் திமுக வணிகம்

கார்ப்பரேட் பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றம்; ஸ்டாலின்

விவசாய விரோத வேளாண் சட்டங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வரம்பற்ற பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால், காய்கறி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்து மக்களைக் காக்கவும், விவசாயிகள் நலனுக்காகவும் பஞ்சாப், கேரள மாநில அரசுகள் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் மேலும் வாசிக்க …..