முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் பேசுகையில், பாஜக தேசிய செயலாளர் போலவே காவல் துறையை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் குறுப்பிட்ட இரு சமூகம் மீடியா உலகில் தவறாக நடத்துவதாக குற்றம் சாட்டினார் .இந்த நிலையில் கூவத்தூர் விஷயங்களை வெளியிடுவேன் என்று அவர் சொன்னதும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 23-ந்தேதி கருணாசை கைது செய்தனர். பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் காவல்துறை சார்பில் மனு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு வழக்குகளில் எம்.எல்.ஏ. கருணாஸை போலீஸ் கைது செய்துள்ளது.
சென்னையில் கடந்த ஏப்ரலில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின்போது போலீஸ்காரர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். கிரிக்கெட் ரசிகர்களும் தாக்கப்பட்டனர்.
நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.வும், அவரது தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக நடிகர் கருணாஸ் மீதும், முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்போது அந்த இரு வழக்குகளில் கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அவருக்கு இப்போது கைது செய்யப்பட்டு இந்த வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் அடுத்த இரு வழக்கில் அவர் ஜாமின் கிடைத்தால் தான் வெளியே வர முடியும் என்பதால் அவரின் ஆதரவாளர்கள் அவரின் கைதை கண்டித்து கருணாசுக்கு ஒரு நீதி பாஜக ராஜாவுக்கு ஒரு நீதியா என்று பொருளில் போஸ்டர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒட்டியுள்ளர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.