இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (DRDO) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையினரால் இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
வங்காள விரிகுடா கடற்பகுதியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கு உட்பட்ட கார் நிகோபர் தீவில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில் இருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று காலை 9.25 மணியளவில் விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது. குறிப்பிட்ட இலக்கில் இருந்த கப்பலை, ஏவுகணை சரியாக தாக்கியது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#Brahmos Supersonic Cruise Missile in Anti-Ship mode was successfully test fired by #IndianNavy today against a decommissioned ship. The missile performed highly complex manoeuvres and hit the bull's eye of the target. #AtmaNirbharBharat https://t.co/vbN7g7L82E
— DRDO (@DRDO_India) December 1, 2020
சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்