உரிமைகளுக்காக போராடும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு.

ஆனால், நிரந்தர உறுதியான தீர்வு கோரி, அமித்ஷா கூறிய பேச்சுவார்த்தை அழைப்பை விவசாய குழுக்கள் நிராகரித்துவிட்டன. இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் சர்வதேச அளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்க்க தொடக்கி உள்ளது.

அதன்படி காணொளி வழியே கனடாவில் வாழும் சீக்கியர்களுக்கு குருநானக் ஜெயந்தி வாழ்த்து கூறிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும்போது, “விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியாவில் இருந்து செய்திகள் வருகின்றன.

விவசாயிகளின் போராட்டங்களை அங்கீகரிக்காமல் நான் என் பேச்சை தொடங்கினால் அது பொறுப்பானதாக இருக்காது. அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கம் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

உரிமைகளுக்காக நடைபெறும் அந்த அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும். போராட்டத்தின் முக்கியத்துவத்தை நம்புகிறோம். மேலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்” என்று கூறி உள்ளார்.

கனடாவில் இந்திய வம்சாளி மற்றும் புலம்பெயர் இந்தியவர்கள் பலர் வசித்து வருகின்றனர். கனடா அரசின் முக்கிய பதவிகளில் இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.. விவசாயிகள் உறுதி