மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’

லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் ஒளிப்பதிவு ரவிவர்மன்.

பொன்னியின் செல்வன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்ற வருடம் தாய்லாந்து நாட்டில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்றது. அதன்பின் இந்தியாவிலும் பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. அதன் பிறகு தான் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க உள்ளார் எனகே கூறப்பட்டது.

ஆனால் தற்போது பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது பாலாஜி சக்திவேல் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்தக் கூட்டணியில் சின்ன பழுவேட்டரையராக நிழல்கள் ரவியும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரபு மற்றும் சரத்குமார் ஆகியோர் வேறு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க: அமேசான் ப்ரைமில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’- சூர்யா அதிரடி அறிவிப்பு