தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தாலும், அவரது பிறந்தநாள் காமன் டிபியை பல முன்னணி நட்சத்திரங்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் மற்ற மலையாள ஹீரோக்களின் படங்களை காட்டிலும் விஜய் படம் ரிலீஸ் ஆனால் அதன் வசூல் அதிகம் இருக்கும். கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் கூட விஜய் படங்களுக்கு சமீப வருடங்களாக அதிக வசூல் கிடைத்து வருகிறது.

1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்த நடிகர் விஜய், தனது 46வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதை கொண்டாட அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தற்போது அதன் ஒரு பகுதியாக இன்று விஜய் பிறந்தநாள் காமன் டிபி வெளியாகி, ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், மோகன்ராஜா,சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து உட்பட சினிமா துறையின் 20 பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு உள்ளனர்.

#THALAPATHYBdayFestCDP மற்றும் #Master ஆகிய ஹாஸ் டேக்குகள் தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை இரண்டிலும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ட்விட்களை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் வாசிக்க: மதுக்கடத்தலில் போலீசிடம் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணனின் கார்..