புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 வருடங்களாக அதிகார மோதல் நீடித்து வருகிறது.
 
இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில்,
 
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின்படிதான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியுமே தவிர, அவருக்கென பிரத்யேகமான சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என தெரிவித்து இருந்த நீதிபதி
 
சட்டப்பேரவையைத் தாண்டிய உயர்ந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. சட்டப்பேரவையில் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பீடு செய்து, ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி அவருக்குச் சிறப்பு அதிகாரம் அளித்து, மத்திய அரசு 2017-ல் பிறப்பித்த 2 உத்தரவுகளும் செல்லாது” என்று அதிரடியாகத் தீர்ப்பளித்தார் நீதிபதி ஆர்.மகாதேவன்.
 
இந்த தீர்ப்பை சற்றும் எதிர்பாரா மத்திய அரசு இதை எதிர்த்தும், அதற்கு இடைக்காலத் தடையை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது .
 
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் புதுச்சேரி அரசு செயல்பட முடியாமல் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அதனால் இந்த மேல் முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
 
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், “இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியதோடு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைப்பதாக கூறியதோடு, அதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
 
அதேபோல தனது அதிகாரத்தைப் பறிக்கும் விதமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் கிரண் பேடி செய்த மேல்முறையீட்டு மனுவையும் நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
 
மேலும் இந்த வழக்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை எதிர் மனுதாரராகச் சேர்க்கவும் உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் வரும் 7-ம் தேதி நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை செயல்படுத்தக் கூடாது” என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.
 
இதனால் மேலும் குழப்ப செயல படா நிலையே தொடர்ந்து வரும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ள்னர்