ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் பாலிடெக்னீக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான அனைத்துப் பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்து அறிவித்துள்ளது.

இதனால் உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,

”கொரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்களோ, அதே அடிப்படையில் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அதாவது, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் தொழிநுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் ஆலோசித்த பின்னர் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகும்.

மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!