தினமும் காலையில் டீ மற்றும் காலை உணவுப்பொருட்களில் சேர்த்துக்கொண்டால் நன்மை பயக்கும் மற்றும் அந்த உணவு நன்கு செரிக்கவும் உதவும். ஒரு 30கி-50 கிராம் இஞ்சி துண்டை எடுத்து இடித்து சாறு பிழிந்து, மேலே உள்ள தௌிந்த நீரை மட்டும் வைத்து, இதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து காலையில் பருகினால் சிறந்த பலன்களை கொடுக்கும்.

இது மட்டுமல்ல  இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ தூள் போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறைவதை தானாக உணர்வீர்கள். தினமும் காலை உணவுடனும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது நோய் அழற்சி பிரச்னைக்கு தீர்வு அளிக்கும்.

மேலும் இஞ்சி ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்கள் நிறைந்ததால் சருமத்தில் உள்ள நச்சுகளை நீக்கி பளபளப்பாக்க உதவும். தலைமுடி பராமரிப்பிற்கும் நல்லது.

மேலும் இஞ்சி குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வயிற்றில் செரிமாணப் பிரச்னை இருந்தால், வாந்தி, நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டாலே குணமாகும். ஆன்டிஇன்பிளமேட்டரி (anti inflammatory), (Anti Anagesic) இருப்பதால் சிறந்த வலி நிவராணியாகவும் இருக்கிறது.

இதில் ஆன்டிஆக்சிடன்ஸ் இருப்பதால் செல்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தி வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.மற்றும் இருதய நோயை தடுப்பதற்கும் பயன்படுகிறது.

பொட்டாசியம், மக்னீசியம் அதிகமாக இருப்பதால் நாவறட்சி, உடல்சோர்வு , ஐபோகெலிமீயா எனப்படும் தாது குறைபாடும் நீங்குகிறது. மேலும் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது,

குறிப்பாக சிறுநீரக் கல், இரைப்பை புற்றுநோய் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்தபின் உண்ணவும். இரத்தப்போக்கு நோயுள்ளவர்கள், தொண்டைப்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

மேலும் வாசிக்க: சமைத்ததை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துபவர்களா நீங்கள்.. அப்போ இதையும் கவனியுங்க..