இந்தியாவில் தற்போது வேகமாக பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிய அறிகுறிகள் காணப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை தற்போது தீவிரத் தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. மராட்டியம், டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கு முன்பு வரை கொரோனா நோய் தாக்கியதன் அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, மூச்சுத்திணறல் ஆகியவைதான் இருந்தன.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் 2வதுஅலையில் உருமாறி பரவும் கொரோனா வைரஸுக்கு புதிதாக அறிகுறிகள் காணப்படுகிறது. இந்த புதிய அறிகுறிகள் கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் முதல் அறிகுறி உலர்ந்த வாய், இந்த அறிகுறி கொரோனா தொற்று ஏற்பட்டதும் ஏற்படுவதாகும். பின்னர் தொண்டை வலி, காய்ச்சல் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. 2வது அறிகுறி உலர்ந்த நாக்கு. இது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் நாக்கை உலர வைக்கும். மேலும் நாக்கின் மீது வெள்ளை புள்ளிகள் தோன்றும். இதனால் உணவு உண்பதில் சிரமம் ஏற்படும்.

உமிழ்நீர் குறைபாடு காரணமாக உணவை முறையாக மென்று சாப்பிடவும் முடியாது. அதுமட்டுமின்றி பேசுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சிலருக்கு கண்வலி அல்லது கண்ணின் நிறம் பிங்க்’ஆக மாறுவது போன்ற அறிகுறிகளையும் பார்க்க முடிவதாக ICMR துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இதுதவிர கண்கள் வறண்டு காணப்படும். தொடர்ச்சியான இருமல், அடி வயிற்றை எப்போதும் புரட்டுவது போன்று இருக்கும்.

புதிதாக தலைவலியும் பலருக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் காணப்பட்ட அறிகுறிகளின் தொடர்ச்சியாக இந்த புதிய அறிகுறிகளும் இணைந்துள்ளது. எனவே கண்வலி, தலைவலி என்றாலும் அலட்சியமாக இருந்துவிடாமல் கவனத்துடன் பொது மக்கள் இருப்பது அவசியம். மேலும் வழக்கமாக முகக்கவசம், சானிடைசர் ஆகியவை அவசியமாக பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்; தேசிய அளவில் டிரெண்டான #ResignModi