11.02.2022 அன்று ட்விட்டர் தீடிரென ஒரு மணி நேரம் முடங்கி பின் சீரானது.. 12/02 முதல் பழைய செய்தி ஊட்டல் (newsfeeds) மட்டுமே காட்டுகிறது.. இதனால் பல பிரலங்கள் பகிர்வுகள் லைக்குகள் கூட பாதிக்கபட்டுள்ளன..

மெட்டாவர்ஸ் நோக்கி டிஜிட்டல் சோசியல் மீடியா நகர்வின் ஒரு படியாக இதை கருதலாமா.. சமூகவலை தளம் முடங்குவது இது இரண்டாவது முறை.. கடந்த டிசம்பரில் கிட்டதிட்ட உலகம் முழுவதும் 12 மணி நேரம் பல இடத்தில் தடைகள் வந்தன..

ஒரு வேளை டிஜிட்டல் சமூக வலைதளங்கள் தன்னை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி வருவதால் (change of architecture algorithms programming code) இனி இது போல அவ்வப்போது நடக்கலாம்..

மெட்டாவர்ஸ் என்பது மெய்நிகர் மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் கவனம் செலுத்தும் தற்போதைய மற்றும் எதிர்கால ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளங்களைக் குறிப்பதாகும்.. இது இணையத்தின் அடுத்த எல்லையாக பரவலாகப் பேசப்படும் அதே வேளையில்..

தொழில்நுட்பத் துறை மற்றும் பிற துறைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வணிக மற்றும் நிதி வாய்ப்பாக மாறும் சாத்திய கூறுகள் நிரம்பவே உண்டு என்றால் அதை மறுப்பதற்க்கு இல்லை. மாறுவது தான் டெக்னாலஜி என்ற பொது தத்துவத்தின் நீங்கா முதல் விதி என்பதால் அவ்வாறாக கூறுலாம் தவறில்லை..

எனது நிறுவனம் www.truinfosys.com இதில் உள்ளடங்கிய மெய்நிகர் மற்றும் பிளாக் செயின் நுட்பம் தான் தற்போது functional process உள் அமைப்பில் சிறு சிறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது..

சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் வெளிப்படுத்தப்பட்ட மெட்டாவேர்ஸிற்கான பார்வையில்,

  • விர்ச்சுவல் ரியாலிட்டி
  • ஹெட்செட்கள்,
  • டிஜிட்டல் கண்ணாடிகள்,
  • ஸ்மார்ட்போன்கள், மற்றும் பிற சாதனங்கள் போன்ற சாதனங்கள் பயனர்கள் 3-டி விர்ச்சுவல் அல்லது ஆக்மென்ட்டட் ரியாலிட்டி சூழல்களை அணுக அனுமதிக்கும், அங்கு அவர்கள் வேலை செய்யலாம், நண்பர்களுடன் இணையலாம்.
  • தொழில் நடத்துதல்,
  • தொலைதூர இடங்களைப் பார்வையிடுதல் மற்றும்
  • கல்வி வாய்ப்புகளை அணுகுதல், இவை அனைத்தும் புதிய மற்றும் அதிவேகமான வழிகளில் தொழில்நுட்பத்தால் அதில் நடைமுறை படுத்தும் செய்யப்பட்ட சூழலில் அவைகள் உருவாகுவதால்..

மெட்டாவர்ஸ் என்பது ஒரு வகையான அனுபவம் மட்டுமல்ல. அதற்குப் பதிலாக, இது எதிர்காலத்தில் பயனர்களுக்குக் கிடைக்கும் மற்றும் முற்றிலும் டிஜிட்டல் இடைவெளிகளில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கும் அதிவேக டிஜிட்டல் அனுபவங்களின் தொடர்ச்சியைக் நோக்கி செல்லும் ஒரு புதிய பாதை..

அதாவது VR ஹெட்செட் மூலம் அணுகப்படும் ஒரு பெரிய விர்ச்சுவல் ரியாலிட்டி மல்டிபிளேயர் கேமில் பங்கேற்பது என்பதில் இதை சுருக்கி விட முடியாது.,

அல்லது டிஜிட்டல் கண்ணாடிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் வழியாக வருகை தரும் வணிகப் பயனர்களிடமிருந்து இருப்பிடம் சார்ந்த அதிவேக டிஜிட்டல் உள்ளடக்கம் போன்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் மற்றும் இயற்பியல் இடங்களை அனுபவிப்பது இனி சமுக வளை தளத்திலே இனி நடக்கலாம்..

இதன் காரணமாக என்ன விளைவுகள் ஏற்படலாம் என உறுதியாக கூற முடியாவிட்டாலும்.. பின்வருபவைகள் அனுமானிக்கப்படலாம்..

  • ஒலை சுவடு எழுத்து உருவாக்கம் கால மாற்றம் நிகழ்ந்தது போலவே பேப்பர் புத்தகங்களின் காலம் பேப்பர் பிரிண்ட் மீடியா இனி மெல்ல மறையலாம்..
  • பிராந்திய மொழி சார் சினிமா ஹீரோ கலச்சாரம் காணமல் போய் தியேட்டர்களே இல்லாத நிலையில் உலக அளவில் பிரதினித்துவபடுத்தும் ஹீரோக்கள் உதாரணம் iron man batman superman etc., போல மட்டுமே இனி மெல்ல உருவாகலாம்..
  • உலக நாடுகளில் தற்போது கடைப்பிடித்து பட்டு வரும் பேப்பர் கரன்சி காணாமல்போய் முழுவதுமாக டிஜிட்டல் கரன்சி அல்லது கிரிப்டோகரென்ஸி சூழலில் உலகம் இயங்கலாம்..
  • உண்மைக்கும் விர்ச்சுவல் அல்லது ஆக்மென்ட்டட் ரியாலிட்டி சூழல்களை கண்டு பிடிக்க முடியாமல் மனிதர்கள் இனி குழம்பலாம் .. அல்லது இலகுவாக குழப்பலாம்..
  • தற்போது உள்ள பல்கலைக்கழகங்கள் காணாமல் போய் டிஜிட்டல் யுனிவர்சிட்டிகள் மட்டுமே இனி இயக்கத்தில் வரலாம்..
  • மனித இனம் கருத்தரிப்பதை நிறுத்தி ரோபோக்கள் இனி கருத்தரிக்கலாம்..
  • இதன் காரணமாக ஆண் இனம் மெல்ல அழிந்து பெண் இனம் மட்டுமே உலகில் நீண்ட நாள் இருக்கலாம்..

இதன் ஒரு சாட்சியாக இரண்டாம் ஆண்டு கணனி பொறியல் படிக்கும் என் மகள் ஶ்ரீ வர மங்கை எனது மகன் சூர்யாவின் (தற்பொது அர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் பொறியல் கல்லூரில் முதலாண்டு படிக்கிறான்) ஒரே ஒரு நிழல் படத்தை மட்டுமே வைத்து உருவாக்கிய வீடியோவை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்..

இதன் படம் எனது மகன் 3 மாதத்தில் ( 2004 ஆம் ஆண்டு) அன்றைய டிஜிட்டல் கேமரா இல்லாத கோடக் பிலிம் ரோலில் எடுக்கபட்ட படம் என்பதை கவனத்தில் கொண்டு பார்க்கவும்..

உலகம் வேகமாக போய் கொண்டிருக்கிறது.. ஆனாலும் இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு நாம் இன்னும் பெண்கள் எந்த உடை தலைக்கு மேலயா அல்லது கழுத்தை மட்டும் சுற்றியா அதுவும் என்ன கலரில் உடுத்த வேண்டும் என தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்..

அதுவும் ஜெய்ஶ்ரீராமுக்கும் அல்லாஹு அக்பர் நடுவே அமர்ந்து கொண்டு அல்லது அப்படி ஆட்சியாளர்களால் விரும்பி அமர வைக்கப்பட்டு கொண்டு..

விஞ்ஞான எழுத்தாளர் பெருமதிப்புக்குரிய நம் அண்ணன் Raj Siva வார்த்தைகளைக் கொண்டு இந்தப் பதிவை முடித்துவிட ஆர்வம் கொண்டுள்ளேன்..
“ஜெர்மனிய பாடசாலைகளில் யூனிஃபார்ம் கிடையாது”

https://www.facebook.com/savenra/videos/440603674478211/