பாஜகவை வைத்து ஆளுநர் மூலமாக மேற்கு வங்க சட்டமன்றத்தை போலவே தன்னால் தமிழக சட்டமன்றத்தை முடக்க முடியும் என்கிறாரே அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

இளம்பெண் செரினாவின் கருவை காவலர்கள் மூலம் எட்டி உதைத்து கலைத்த கருணைமிகு அம்மா வழி ஆட்சி செய்பவர்கள் அதிமுகவினர் அல்லவா..

கொடநாடு மர்ம கொலையில் 5 பேர் வரிசையில் சயானின் 3 வயது மகள் என்றும் பாராமல போட்டு தள்ளியவர்கள் அல்லவா .. ஆக கலைப்போம் நறுக்குவோம் பிசுக்குவோம் என்றெல்லாம் சொல்லாமல் வேறு எப்படி பேசுவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்..
நிற்க ..

சட்டமன்றம் கூட்டதொடர் முடிந்தவுடன் சட்டமன்ற செயலாளர் பரிந்துரைபடி சட்டமன்ற கூட்டத்தொடரை நிறுத்தி வைப்பது நடைமுறை மரபு தான்..

பாராளுமன்றத்துக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றத்துக்கும் இந்தமுறை பொருந்தும்.. அதாவது கூட்ட சொன்னால் ஆளுநர் கூட்டுவதும்.. கூட்ட முடிவில் அதனை சபாநாயகர் உத்தரவின் பேரில் நிறுத்துவதும் தொன்று தொட்டு நடப்பது தான்..

தொடர்ந்து எரிச்சல் வரும்படி கருத்து கந்தசாமியாக மாறி மேற்கு வங்க ஆளுநர் டாக் அடிக்க.. பொறுத்து பொறுத்து பார்த்த மம்தா பொறுமை இழந்து மேற்கு வங்க ஆளுநர் சேசியல் மீடியா கணக்குகளை பிளாக் செய்ய..

மேற்கு வங்க ஆளுநர் இதனால் அவமானப்பட்டு மேற்குவங்க முதல்வரிடம் பகிரங்கமாகவே கெஞ்ச ஆரம்பிக்க.. ஆக பழிதீர்க்கும் விதமாக இந்த முறை சட்டமன்ற முடக்கத்தை ஏதோ தானே செய்தது போல குறும்பாக சோசியல் மீடியாவில் வம்படி செய்ய..

அதை என்னமோ உலக சாதனை போல எடுத்து கொண்ட #பாஜக விசிலடிச்சான் ஐடி நிர்வாக குஞ்சுகள் விவகாரம் செய்ய.. அதை உண்மை யென நம்பி அதிமுகவின் முன்னாள் முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் சிங்கமென கர்ஜித்து அட்டை கத்தியை வழக்கம் போல சுற்ற..

அதை பிபிசி தமிழ் என்னமோ பெரிய தலையில் இடி விழுந்த செய்தி போல எடுத்துரைக்க.. ஆனாலும் இந்த குறும்பை ரசிக்காமல் இதனை ஒரு சக முதல்வராக எரிச்சலுற்ற M. K. Stalin முறையாக கண்டிக்க..

உடனே தனது அடுத்த டீவிட்டில் தமிழ் நாடு முதல்வர் மற்றும் மேங்க முதல்வர் இருவருக்கும் டாக் அடித்த மேற்கு வங்க ஆளுநர் நீண்ட விளக்கம் அளிக்க.. அதில் தெளிவாக மாநில அரசின் கோரிக்கையே தான் பின்பற்றி உள்ளதாக கோபத்துடன் சுட்டிக்காட்டி தெரிவிக்க..

//Find it unusually expedient to respectfully invite indulgent attention of TN CM @mkstalin that his extremely harsh hurtful observations are not in the least in conformity with facts- attached order. Assembly was prorogued at express request //

அது சரி மேற்கு வங்க ஆளுநர் ஏன் தமிழ்நாடு முதல்வர் டீவிட் போட்டவுடன்..வரிந்துகட்டிக்கொண்டு இரு பக்கங்களுக்கு நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டும் என இதனை படிப்பவர்கள் கேட்க..

ஒருவேளை 2024 தேர்தலில் ஒன்றிய அரசின் புது ஆட்சி அமைப்பதில் இருக்க போகும் #திமுக வின் பங்கு பற்றி எண்ணமா என நினைக்க.. காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க..

https://www.facebook.com/savenra/posts/7945536988805488