தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை (மே 15) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று (மே 14) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

1. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

2. பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.

3. ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் வழக்கம்போல் திறக்க அனுமதிக்கப்படும்.

4. பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

5. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

6. தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

7. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.

இ-பதிவு முறை:

1.வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

2.அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அடையாளமாக ஆதியோகி சிலை; சர்ச்சையால் 5 மணி நேரத்தில் திடீர் மாற்றம்