சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதுக்கடைகள் திறக்கப்படாது. சென்னை மாநகர எல்லைக்குள் வராத, கட்டுப்பாட்டில் வராத பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி, ஆந்திராவில் மதுபானங்களுக்கு சிறப்பு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் நாளை மறுநாள் முதல் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன.

மேலும் வாசிக்க: தமிழக அரசின் டாஸ்மாக் கடை அறிவிப்பால் மக்கள் அச்சம்..

ஊரடங்கை பிறப்பித்துவிட்டு டாஸ்மாக் கடைகளை திறந்தால் ஊரடங்கு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை அரசு விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுக்கடைகள் திறப்பதற்க்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு” என்று தெரிவித்துள்ளார்.

[su_carousel source=”media: 13370,13371″ limit=”50″ width=”700″ height=”500″ items=”1″ scroll=”3″ autoplay=”5100″ speed=”0″]

மேலும் கவிஞர் வைரமுத்துவும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள பதிவில்,”மது என்பது – அரசுக்கு வரவு; அருந்துவோர் செலவு. மனைவிக்குச் சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை. ஆனால், என்ன பண்ணும் என் தமிழ் மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?” என்று கூறியுள்ளார்.