மராட்டியத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்பட்ட 150 வெண்டிலேட்டர்களில் 113 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்பது தீவிரமான பிரச்னை. இதுதொடர்பாக ஒன்றிய பாஜக அரசு விளக்கம் அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதிலிருந்து மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை தற்போது வரை நீடித்து வருகிறது. மாநிலங்களில் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, ஒன்றிய பாஜக அரசு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வெண்டிலேட்டர்கள் அனுப்பிவைத்தது.
இப்படி அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் பல செயல்படாமல் பழுதடைந்துள்ளதாக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியிருந்தன. இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை விமர்த்து, ‘செயல்படாத வெண்டிலேட்டர்களும் பிரதமர் மோடியும் ஒன்று’ என கூறியிருந்தது வைரலானது.
[su_image_carousel source=”media: 23568,23567″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடாவுக்கு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்த அனுப்பப்பட்ட 150 வென்டிலேட்டர்களில் 113 வென்டிலேட்டர்கள் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மராட்டிய அரசு, ‘இந்த வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட இருந்தன’ என்று கூறியது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஆர்.காலே மற்றும் பி.யு.தேபத்வார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. வெண்டிலேட்டர்கள் உயிர்காக்கும் சாதனங்களாகும். அவை சரியாக வேலை செய்யாவிட்டால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
மக்கள் உயிருடன் விளையாடுகிறீர்களா? தரமற்ற வென்டிலேட்டர் வழங்கிய நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறீர்கள். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று ஒன்றிய பாஜக அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலி: WHO அதிர்ச்சி ரிப்போர்ட்