திமுக தலைவர் கருணாநிதி செவ்வாயான்று காலமானார். அவரது உடலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்திற்கு பின்னால் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் அதிமுக அரசின் நிலைபாடு குழப்பம் தருவதாக விசாரனையை பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.இதன் விவரம் இதோ:

அதிமுக அரசு வக்கீல் : திடீரென்று 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது துரதிருஷ்டவசமானது.
நீதிபதி : வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. மெரினாவில் அடக்கம் செய்வதில் இப்போது சட்ட சிக்கல் எதுவும் இல்லையே.

அதிமுக அரசு வக்கீல்: கலைஞர், காமராஜருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை.
நீதிபதி: காமராஜருக்கு இடம் ஒதுக்கும்படி யாரும் கோரிக்கையே வைக்கவில்லையே.

அதிமுக அரசு வக்கீல்: தீர்ப்பை இன்றே சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.
நீதிபதி : விசாரணையை ஒரு வாரம் கழிச்சு வெச்சுக்கலாமா?

அரசு வக்கீல் : மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தை வழக்கில் சேர்க்கவில்லை.
திமுக வக்கீல் வில்சன் : கட்டிடம் கட்ட தான் அவர்களது அனுமதி தேவை. அடக்கம் செய்ய அனுமதி தேவையில்லை.

இப்படி எந்த அடிப்படை விஷயத்தையும் ஆராயமல் தப்பு தப்பாக பேசி அதிமுக அரசு வழக்கில் சொதப்பி விட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்ய நேற்று காலை அனுமதி அளித்தனர்.

இந்த தகவலை கேள்விப்பட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் பக்கம் நின்றிருந்த மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

தொடர்ந்து அவர் அங்கிருந்த தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அவர் கதறி அழுவதை பார்த்து அங்கிருந்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் தேற்றினர். சிறிது நேரத்திற்கு பிறகே மு.க.ஸ்டாலின் அழுகையை நிறுத்தினார். அவர் அழுவதை பார்த்து அங்கிருந்தவர்களும் கண்ணீர் வடிக்க தொடங்கினர். இதனால், ராஜாஜி ஹால் பகுதியே கண்ணீர் கோலமாக காட்சியளித்தது.

அப்போது, அண்ணா சாலை, ராஜாஜி ஹாலில் கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்துடன் முழக்கமிட்டனர். நீதி வென்றது, நீதி வென்றது, கருணாநிதி புகழ் ஓங்குக என்று தொண்டர்கள், பொதுமக்கள் ெதாடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். அவர்களது, உற்சாக முழக்கம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது.

கலைஞருக்கு 26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க தினமாக அறிவித்தன.

தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் அனைத்தும் விடுமுறை நாளாக அறிவித்தன.

பீகார் அரசு கலைஞருக்காக இரண்டு நாள் துக்கம், விடுமுறையோடு அறிவித்தது.

இந்திய தேசிய வரலாற்றில் இப்படி ஒரு துக்க தினம் இவ்வளவு மாநிலங்களால் அறிவிக்கப்பட்டது இதுவே முறையாகும் எ திமுகவினர் பெருமையோடு கூறிவருகின்றனர்.