சிறுமியின் கையைப் பிடித்து, பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ பாலியல் குற்றத்தின் கீழ் வராது என்று அதிர்ச்சிகரமான தீர்பை மீண்டும் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் நீதிபதி வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தனது 5 வயது சிறுமியை, வீட்டின் அருகில் உள்ள 50 வயது நபர் பாலியல் வன்முறை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் தரப்பில் அளித்துள்ள புகாரில், தான் பார்க்கும்போது தனது மகளின் கைகளை அவர் பிடித்திருந்தார் என்றும், அந்த நபரின் பேன்ட் ஜிப் திறந்திருந்ததாகவும் சிறுமியின் தாய் குறிப்பிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியும் தந்து வாக்குமூலத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னை பாலியல் வன்முறை செய்தற் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்பை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி புஷ்பா கனேடிவாலா முன் விசாரணைக்கு வந்தது.
ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லை- உயர்நீதிமன்றம்
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, இது பாலியல் துன்புறுத்தல் இந்திய தண்டணை சட்டம் 354ன் என்ற பிரிவின் கீழ் தான் வரும் என்றும் பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும் அதிர்ச்சி தீர்பை அளித்துள்ளார்.
அதாவது சிறுமியின் கைகளைப் பிடிப்பதும், ஜிப்பை திறப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்றும், உடல் ரீதியான தொடர்பு இருந்தால் மட்டுமே இது பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வரும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதே பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா தான் கடந்த சில நாட்களுக்கு முன், உடலோடு உடல் தொடுவது மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என்ற அதிர்ச்சி தீர்பை வழங்கினார். அந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து, உச்சநீதிமன்றம் தடை விதித்தும் குறிப்பிடத்தக்கது.
ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா.. உச்சநீதிமன்றம் கண்டனம்