பெரம்பலூர் அருகே உருண்டையாக கண்டெடுக்கப்பட்டது டைனோசர் முட்டைகள் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் சில தினங்கள் முன்பு மண் எடுத்து கொண்டிருந்தபோது, முட்டை உருவில் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த உருண்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ, சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என வதந்தி பரவத் தொடங்கியது.
இதனால் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் இருந்ததாக பல சொந்தக் கதைகளை இணையத்தில் பரப்பினர். பலவகை மீம்ஸ்களும் சுற்றி வந்தது. இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில், பெரம்பலூர் டைனோசர் பற்றிய பேச்சுத்தான்.
டைனோசர் முட்டை என செய்தி பரவியதால், திருச்சி அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவகுமார் மற்றும் அரியலூர் மாவட்ட புதை உயிரி அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் குன்னம் பகுதியில் குடிமராமத்து நடைபெற்ற ஏரி மற்றும் குன்னம் ஆனைவாரி ஓடையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
[su_image_carousel source=”media: 18107,18108″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]
அதனையடுத்து காப்பாட்சியர் சிவகுமார் அளித்த பேட்டியில், “குன்னம் ஏரியில் குடிமராமத்து பணியின்போது கண்டறியப்பட்ட உருண்டைகள் எதுவும் டைனோசர் முட்டைகள் கிடையாது. அதில் உருண்டைகளின் மையத்தில் அம்மோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் உள்ளது.
அதாவது நத்தைகளின் படிமங்கள் மீது அம்மோனைட் படிவதால் ஏற்படும் உருண்டைதான் இது. குன்னம் பகுதியில் பல இடங்களில் அம்மோனைட் மற்றும் கடலில் வாழும் உயிரினத்தின் ஓடுகளான கிளிஞ்சல்கள் அதிகம் கண்டறியப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். இதையொட்டி டைனோசர் முட்டை சர்ச்சை முடிவடைந்துள்ளது.