கடந்துபார்

கடினம் தான் வாழ்க்கையா
என்றே சபித்தேன்
சிரித்தப்படியே கடந்து பார்
என்றது..

தனிமை தான் நிரந்திரமா
என்றே கோபித்தேன்
சிரித்தப்படியே கடந்து பார்
என்றது..

துன்பம் தான் விதிக்கப்பட்டதா
என்றே கடுகடுத்தேன்
சிரித்தப்படியே கடந்து பார்
என்றது..

முதுமை தான் இறுதியா
என்றே முனுமுனுத்தேன்
சிரித்தப்படியே கடந்து பார்
என்றது..

ஏமாற்றம் தான் நியதியா
என்றே அலர்தூற்றினேன்
சிரித்தப்படியே கடந்து பார்
என்றது..

அனைத்தையும் கடப்பது
நான் என்றால் நீ
ஏன்..
எதற்கு..

முகம் பார்த்தேன்
கண்ணணே..
ஏசப்பாவே..
அல்லாவே..
புத்தனே..
இயற்கையே..
பகுத்தறிவே..
பராசக்தியே..

அனைத்தும் ஒன்றாகி
கலந்து கடப்பதும்
கடக்க உதவுதும்..

உன்னில் கரைவதும்
நானே என்றது
சிரித்தப்படியே மனிதத்திடம் ..

சவெரா