ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்; இந்தியாவின் உத்தரப்பிரதேசத்து அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என நேபாள பிரதமர் கேபி. ஷர்மா ஒலி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை அதிகரித்துள்ளது.
இந்தியா குறித்து தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் நேபாள பிரதமர் ஒலி. முதலில் இந்திய நிலப்பகுதிகளை சொந்தம் கொண்டாடி நேபாள வரைபடத்தில் இணைத்தார். அதனைத் தொடர்ந்து ராமர், நேபாளத்தில் தான் பிறந்தார் எனக் கூறி சர்ச்சைக்கு வித்திட்டார்.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர்கள், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனிடையே நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் ராமரின் பிறப்பை முன்வைத்து, ராமர் பிறந்தது தெற்கு நேபாளத்தில் அயோத்தியாபுரியில் தான்; இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இல்லவே இல்லை என மீண்டும் சர்ச்சையை அதிகரித்துள்ளார் பிரதமர் ஒலி.
மேலும் வாசிக்க: NEP 2020 கிராமப்புற இளைஞர்களை சிப்பாயாக மாற்ற வல்லது என தளபதி பிபின் ராவத் பேச்சால் சர்ச்சை