மாரி வழக்கும், அதன் மீதான தீர்ப்பும்! விமர்சனம்!!

முதலாவதாக மாரிதாஸ் எனும் நபரின் மீது கொடுக்கப்பட்ட புகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு.

பொதுவாக முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்யக்கோரும் மனுக்களுடன் சேர்த்து தடைகோரும் மனுவும், சிறையில் இருந்தால் பிணையில் விடுவிக்கக்கோரும் மனுவும் சேர்த்து தாக்கல் செய்வதுதான் வழக்கம்.

ஆனால், இம்மனுவுடன் அத்தகைய இடைமனுக்கள் ஏதுமில்லை. இது முதல் சந்தேகம். ஏதோ மனுத்தாக்கல் செய்தவுடன் முதல் தகவல் அறிக்கை இரத்தாகிவிடும் என்ற நம்பிக்கையில் தாக்கல் செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது.

இரண்டாவதாக, திமுகவும், திகவும் பிபின் ராவத்தின் மரணத்தைக் கொண்டாடியதாக மாரிதாஸ் கூறியிருக்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் எதுவும் கோரப்படவில்லை. அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கூடுதல் அட்வகேட் ஜெனரல் எடுத்துக்கூறியதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

மூன்றாவதாக, தாக்கல் செய்யப்பட்ட முதல்நாளிலேயே பட்டியலிடப்பட்டு, அன்றே முதல் தகவல் அறிக்கையின் நகல் இணைப்பதில் இருந்து விலக்களிக்கப்பட்டு, மூன்றாம் நாளே விசாரிக்கப்படும் அதிசயம் அர்னாப் கோஸ்வாமி வழக்கை நினைவுபடுத்துகிறது.

நான்காவதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரலை பலமுறை இடைமறித்து மனுதாரரின் வழக்கறிஞராக மாறி கேள்விகேட்டமை இரசிக்கத்தக்கதாக இல்லை.

ஐந்தாவதாக, புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கேட்கவே இல்லை.

ஆறாவதாக, மாரிதாசை இமயத்திற்கு உயர்த்தி புகழ்பாடி இருப்பது விநோதமான நடவடிக்கையாகவே படுகிறது.

ஏழாவதாக, 21 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் எங்குமே பிரிவினைவாதக் குற்றச்சாட்டுக்கு பதிலில்லை. இடிந்தகரை மீனவர்கள் மீதும், திருமுருகன் காந்தி மீதும் இத்தகைய பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டதும், அத்தகைய வழக்குகளில் இதே நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடுகளும் முரண்படுவதை மறுக்க இயலாது.

சட்டப்பிரிவுகள் 124 A, 153A, 505, 594 ஆகியன சாதாரணமானவை அல்ல. பிணையில்கூட வர இயலாத கடினமான சட்டப்பிரிவுகள். அவற்றைக் கொண்ட முதல் தகவல் அறிக்கையை போகிறபோக்கில் இரத்து செய்யும் உத்தரவு நீதித்துறையின் மீதான ஆதிக்கத்தை நிறுவுகிறது.

https://www.facebook.com/punithan.ta/posts/4743047912421018