தற்போது தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிக்கப்பட்டு இதனால் தமிழ்த்தாய் பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என திமுகவின் தமிழ்நாடு அரசு ஆணையாக அறிவித்து விட்டதே ..

இதன் விளைவு என்னாவாக இருக்கும்.. இனி எழுந்து இருக்க தேவையில்லை என்று சொன்னவர்களும் எழுந்து நிற்க தான் வேண்டுமா..

ஆமாம்.. வேறு வழியில்ல.. முக்கியமாக.. ம்ம்ம்.. சரி வேணாம்..

நல்ல செய்தி வந்த நேரத்தில் ஐஐடியில் கேவலைத்தை அரங்கேற்றியவர்களை மற்றும் அதனை வெக்கமில்லாமல் ஆதரித்தவர்களை பற்றி வெட்டி பேச்சு எதற்கு..

தமிழ்த்தாய் வாழ்த்து பாட்டு பற்றிய வரலாற்று குறிப்பின் தொகுப்பு இதோ..
பாடலை எழுதியவர் : மனோமனியம் சந்தரனார் (Manonmaniyam P. Sundaranar),
இசை அமைத்தவர் : எம் எஸ் விஸ்வநாதன்

மாநிலத்தின் வாழ்த்து தாயின் பாடல் வரிகள்:
“நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

மனோமனியம் சந்தரனார் வாழ்ந்த காலம் : ஏப்ரல் 4, 1855 – ஏப்ரல் 26, 1897
ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.

நாடக நூலான மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அன்றைய திமுக அரசின் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது.

இந்து மதம் என்று ஒன்று இல்லாத காலத்தில் மனோமனியம் சந்தரனார் இருந்ததால் இவர் சைவ மதம் சேர்ந்தவர்.. திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார்.

இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன. மேலும் இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார். இந்த பாடல் அன்றைய அரசால் திருத்தம் செய்தே வெளிப்பட்டது..

திருத்தபட்ட காரணம் அறிய திருத்தப்படாத வெர்ஷன் கீழே தரபட்டுள்ளது,. திருத்தப்படாத வெர்ஷன் படித்தால் இவர் எப்படிபட்ட திராவிட ஸ்டாக் என படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்..

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”

இவர் பெயரிலே திமுக அரசின் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என 1990 செப்டம்பர் 7 ஆம் நாள் திருநெல்வேலி நகரில் கொக்கிரகுளம் பகுதியில் இருந்த மாவட்ட ஆட்சியக வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

கஜேந்திர காட்கர் கமிஷன் பரிந்துரைக்க மைய மதுரை காமராசர் பல்கலைக்கழக தென்பகுதிக் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் உருவானது என்பதும் குறிப்பிடதக்கது.

இன்னொரு முக்கிய செய்தி தை 1 தான் தமிழர் புத்தாண்டு என 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் உடன் மாநாடு நடத்தி ஆராய்ந்து சொன்ன மறைமலை அடிகள் இவரிடமே தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மறைமலை அடிகள் பெயரிலே தான் சைதாப்பேட்டையில் மிக பெரிய பாலத்தை 1966 ஆண்டு காங்கிரஸ் அரசு கட்டியதும் குறிப்பிடதக்கது. இந்த பாலம் முதலில் தொடங்கபட்டது 1728 அண்டில்.. அன்றைய பாலத்தின் கட்டுமான மதிப்பு 1 லட்சம் ரூபாய்.. இதனை அப்போது தனது வணிக தேவைக்காக கட்டியவர் ஆர்மினிய நாட்டின் தொழிலதிபர் Coja Petrus Uscan..

தமிழ் தாய் வாழ்த்து பாட்டின் ஆங்கில வெர்ஷன் படித்தால் ஒரு வேளை அதன் பொருள் தமிழ் புரியாதவர்களுக்கும் #dravidanstock மகிமையும் மகத்துவமும் புரியும்..

English Version
The song was written by Manonmaniam Sundaram Pillai and composed by M. S. Viswanathan.
“Brimming Sea drapes exuberant Dame Earth!
Beautified face; the exalted Indian Continent!
South! In particular Grand Dravida Empire!
Aesthetic Thilakam on thy beauteous curved forehead!
Fragrance of Thilakam makes entire world delirious!
Oh! Goddess Tamizh! Let your fervor spreads in all directions!
Many a life! Many a world! Creations of Thine! Decimations too !
Ever pervading Creator! Remain as ever! Ever as Thy have been!
Kannada, Joyous Telugu, Dainty Malayalam with Thulu!
Born of thy lips, the one that became many
Just like Aryan (language) you don’t go out of use, your Everlasting and undying youth!
Ever remain afresh Thee! Purity intact too!
Delighted! Praise thou beauteous Tamizh, youthful forever! Awestruck!
Praise unto thee!
Praise unto thee!”

தொகுப்பின் மூல அதாரம் :
1) “Manonmani 1942”. The Hindu.
2) “University of Glasgow : International Story : Robert Harvey”. Internationalstory.gla.ac.uk.
3)Encyclopaedia of Indian literature vol. 1. Sahitya Akademi. 1987. ISBN 978-81-260-1803-1.

https://www.facebook.com/savenra/posts/7551336354892222