துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்காசிய நாடான துருக்கி, கிரிஸ் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி கடற்கரை மற்றும் கிரேக்க தீவான சமோஸ்க்கு இடையே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில், 7.0 ஆக பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சமோஸ் தீவில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. இதனால் சுனாமி அலைகள் நகரத்துக்குள் புகுந்துள்ளதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது.

[su_image_carousel source=”media: 18345,18346″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து துருக்கி துணை மேயர் ஜியோர்கோஸ் டியோனீசியோ கூறுகையில், இது குழப்பமாக இருந்தது. நாங்கள் இதுபோன்ற எதையும் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. சமோஸ் மக்கள் ட்டிடங்களுக்கு செல்ல வேண்டாம், திறந்த வெளியில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

நவம்பர் 7ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49- இஸ்ரோ அறிவிப்பு