அமெரிக்காவில் சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சண்டை தற்போது புதிய மோசமான நிலையை அடைந்துள்ளது. சீனாவை வெளிப்படையாக அமெரிக்கா எதிர்க்க தொடங்கி இருக்கிறது. கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்றும், சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதற்காக உலக சுகாதார மையத்துடன் உறவை துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். வுஹான் வைரஸின் பரவல் குறித்து சீனா மறைத்துவிட்டது. இதனால் பல லட்சம் பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் இதனால் பலியாகி உள்ளனர். சீனா உலக நாடுகளுக்கு எதுவும் சொல்லாமல் மறைத்துவிட்டது.

வுஹான் மக்கள் வேறு சீன மாகாணங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களை வெளிநாடு செல்ல சீன அனுமதித்ததன் மூலம் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சீனா கொரோனாவை பரப்பியது.

மேலும் வாசிக்க: ‘I Can’t Breathe’… அமெரிக்காவில் இனவெறியால் கொல்லப்பட்ட இளைஞரின் கடைசி வார்த்தைகள்

பல வருடங்களாக அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சீனா உளவு வேலைகளை செய்து வந்தது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்,டு அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்புகள், மற்றும் ஆராய்ச்சிகளில் சில சீன மாணவர்கள் ஈடுபட தடை விதிக்கிறேன்.

அமெரிக்காவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். அமெரிக்காவின் பங்கு சந்தையில் இருக்கும் சீனா நிறுவனங்களை கண்காணித்து வருகிறோம். அந்த நிறுவனங்கள் அமெரிக்க விதிக்கு எதிராக செயல்பட்டால் அந்த நிறுவனம் மீது தடை விதைக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இது அமெரிக்க சீனா மீது தொடுத்து இருக்கும் அறிவுபூர்வமான வர்த்தக யுத்தம் என்று கூறுகிறார்கள்.