கொரோனா வைரஸ் பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது பெருமிதம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 15.76 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் 96 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுவதும் அமெரிக்காவில் தான். இதுவரை ஒரு கோடிக்கு மேலான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதும் ஒரு கௌரவம்தான். மேலும் மற்ற நாடுகளைவிட அதிகமாக கொரோனா பரிசோதனை செய்துவருவதால்தான் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: கொரோனா வைரஸ் உலக நாடுகளில் என்ன நடக்கிறது.. சுதந்திர விசாரணை நடத்த முடிவு

இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழ ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் ஒரு வார காலத்துக்கு முன்னதாக ஊரடங்கை அறிவித்திருந்தால், 50% கொரோனா மரணங்களைத் தடுத்திருக்க முடியும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 36,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்திருப்பதை தடுத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளது.