இன்றைய பதிவில் பதிவர் நண்பர் Sridhar Subramaniam அவர்கள்.. //வளர்ச்சிக் குறியீடுகளில் உபி, மபி, குஜராத் போன்ற மாநிலங்களை விட தமிழ் நாடு பற்பல மடங்கு மேலே இருக்கிறது. ஆனால் கருத்துரிமைக்கு எதிரான பழிவாங்கல் அணுகுமுறையில் அந்த மாநிலங்களுக்கும் எங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று மற்றுமொரு முறை நிரூபித்து இருக்கிறோம் என்றும்..

மாரிதாஸ் பதிவை உண்மையிலேயே குற்றமாகத்தான் கருதப்பட வேண்டும் என்றால் கூட அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என்றும்.. அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் வேறு நாட்டுக்கு தப்பி ஓடும் வாய்ப்பு இல்லை என்ற பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கக் கூடாது.

ஜனநாயகத்திலும் நவீன சிந்தனையிலும் முதிர்ந்த சமூகங்கள் இப்படித்தான் கருத்து சம்பந்தப்பட்ட ‘குற்றங்களை’ அணுகுவார்கள். பழிவாங்கும் உணர்வில் இருந்து மீளாத பண்டைய சமூகங்களோ ‘அவனைப் புடிங்க ஆபீசர், புடிச்சி உள்ளே போடுங்க! என்று கூக்குரல் விடுவார்கள்.

புடிச்சி உள்ளே போட்டதும் வெற்றிக் களிப்பில் மிதப்பார்கள். வழக்கு, தீர்ப்பு எல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை. ஆதிகுடிகள் நீதிமன்றம் எல்லாம் வைத்து நடத்தி வந்தார்களா என்ன? இனி மற்ற பலர் போல மாரிதாசும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம். மாதக்கணக்கில் உள்ளே அடைக்கப்படலாம் என்றும்..

ஒருவர் முரட்டு முட்டாளாக இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக இந்தியாவில் ஆக்கப்பட்டு விட்டதா என்ன.. . // என்றெல்லாம் தனது ஆதங்கத்தை கூறி உள்ளாரே..

படித்தேன்.. பார்த்து விட்டு அவரது பதிவிலே ஒரு சிறு குறிப்பை தந்துவிட்டு இதில் இன்னும் விரிவாக எழுத விரும்புகிறேன்.. அவரின் வாதத்தை வாத தர்மத்தின் படி அப்படியே ஏற்று கொள்கிறேன்.

அதற்கு முன் சட்டம் அவர் படித்து விடட்டும் என்றும் அவரை பணிந்தும் கேடும் கொள்கிறேன்.. ஏனென்றால் அவரை காவலில் வைத்து இருப்பது நீதிமன்றம்.. திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாடு அரசின் காவல்துறை அல்ல..

காரணம் மாரியை கைது செய்யும் முன் ஆதாரத்தை கேட்டு உள்ளது போலிஸ்.. என்ன ஆதாரம்.. தமிழ்நாடு திமுக ஆட்சியில் 6 மாதத்தில் காஷ்மீராக மாறி விட்டது என அவர் கூறிய ஆதாரமே அது.. தந்தாரா ஆதாரத்தினை அவர்.. இல்லையே.. அப்போது என்ன வழி..

ஸ்ரீதர் கூற்றுப்படி வழக்கு தான் பதிய வேண்டும்.. ஆக சட்டப்படி போலிஸ் அதை தான் செய்துள்ளது. மாரி பேசி இருப்பது தேச இறையாண்மை குறித்த செயல்.. சட்ட பிரிவுகளும் அதனால் கடுமையாக தான் இருக்கும் எனபது அனைவரும் அறிந்தது தானே..

அதென்ன நாக்பூர் தமிழரல்லாத கட்சி அன்னமா அன்பு மகன் சீமான் தொட்டு.. மாரியின் கைதை கண்டிக்காத துக்ளக்கை சோ குடும்பத்திடம் இருந்து மர்மாக கைபற்றிய குருமுர்த்தி, ஹெச். ராஜா ஷர்மா உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும் கருத்து சுதந்திரம் காணமல் போச்சி என ஓப்பாரி மட்டும் வைக்கிறார்கள் என புரியவில்லை..

இன்னொரு விஷயத்தை நண்பர் ஶ்ரீதர் தனது வாத திறமையால் சுலபமாக மறக்க முயல்கிறார். அது
மாரி ஆதாரம் தராமல் இருந்ததால் தான் 23 டிசம்பர் வரைக்கும் கிடைத்த நீதிமன்ற காவல் அவருக்கு என்பதைனை..

காரணம் 153(A) 504 505(2) 505(1B) சட்ட பிரிவுகளிம் இதில் நான்கில் மூன்று ஜாமின் கிடையாது.. ஆக மாரி பேசியது தவறு தான்.. ஆனால் மாரி ஆதாரமும் கொடுக்க மாட்டார்.. ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு போலீசார் வழக்கு மட்டுமே பதிய வேண்டும்..

அப்படி வழக்கு பதிந்தபின் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதெல்லாம்.. எப்படி இருக்கிறது என்றால் கல்யாணம் ஆன புது மாப்பிள்ளை புது பெண்ணை தொடவே கூடாது ஆனாலும் தங்களுக்கு பேரன் பேத்தி வந்தே ஆக வேண்டும் என மணமகளின் பெற்றோர்கள் விசித்திரமான கண்டிசன்கள் போடுவதை போல..

இதில் மணமகளின் பெற்றோர்கள் தான் கருத்துரிமை வேண்டும் எனப்படும் யாதர்த்த உண்மையறியாமல் ரோஷத்துடன் கோஷம் போடுபவர்கள் என்றும்.. புது மாப்பிள்ளை தான் தமிழ் நாட்டின் காவல்துறை என்றும்.. புதுமணப்பெண் தான் சட்டம் ஒழுங்கு என்றும்.. என சொல்லியா புரியாதவர்களுக்கு நம்மால் புரிய வைக்க முடியும்..

கைது செய்யப்படும் முன் விசாரனையில் ஆதாரம் என மாரி கூறி இருந்தால்.. 5 ஆண்டுகள் கடும் தண்டனை வழங்கும் சட்ட பிரிவுகளுக்கு இடமே கிடையாது.. நீதிமன்ற காவலும் கிடையாது என்ற உண்மை எதனால் மறக்க விருப்புகிறார் அறிவில் சிறந்த ஶ்ரீதர் என்பதும் என் போன்றவர்களுக்கு எப்படி யோசித்தாலும் புரியவில்லை..

ஆக மாரிக்கும் அவரை இயக்கிய #RSS குருமுர்த்திகளுக்கும் நீதிமன்றத்தில் கைதை தவிர்க்க முகாந்திரம் இருந்தும்.. அவருக்குகாக இந்தியாவின் மிருக பலம் வாய்ந்த ஆர்எஸ்எஸ் பிண்ணனில் பிரபல சட்ட நிறுவனம் களத்தில் இறங்கியும் அவரை நீதிமன்றம் தனது காவலில் எடுத்ததை ஏன் தடுக்க முடியவில்லை என்பதனை விளக்குவார்களா கருத்துரிமை பேரிலே செவ்வாழை தோட்டத்தில் குதித்து குத்தாட்டம் போடுபவர்கள்..

ஆக ஆர்எஸ்எஸ் பாஜக அன்பர்களே சும்மா குதி குதி என கோபுரம் உச்சியில் நின்று குதிக்காமல் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. Mari burned away all hiw law provided options.. ஆகையால் தான் Mari is now under custody property of Judiciary.. not any more under police arrest..

சுருங்க சொல்ல வேண்டுமானல் இது போலிஸ் கைது அல்லவே மாறாக நீதிமன்ற காவல்.. எப்படி தமிழ்நாடு காஷ்மீராக மாறியது என்ற ஆதாரத்தை அவரோ அல்லது அவரை பிண்ணனியில் இயக்கிய குருமூர்த்தியோ தந்து விட்டால் அவர் மீது போட பட்ட பிரிவுகள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் விடுதலையை திமுக தலைமையே தடுக்க நினைத்தாலும் தடுக்கவே முடியாது..

ஆக இனி மேல் தேச துரோக திவிரவாதி என குற்றசாட்டால் நீதிமன்ற காவலில் இருக்கும் முரட்டு முட்டாள் என அன்போடு ஸ்ரீதரால் அழைக்கப்பட்ட #மாரிதாஸ் போன்றவர்களுக்கு..

ஶ்ரீதர் தனது பொன்னனான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நட்புடன் கேட்டு கொள்வதோடு நில்லாமல்.. அருள்கூர்ந்து புது மாப்பிள்ளை என்கிற காவல்துறையை.. புதுமணப்பெண் என்கிற சட்டம்- ஒழுங்கை தொட விடுங்கள்.. தொட்டால் தான் குடும்பம் நடத்த முடியும்.. இல்லறம் நல்லறமாகும்..

அதன் மூலம் ஆதாரமற்ற பொய் பித்தலாட்ட புரட்டுகள் அழியப்பட்டு.. தமிழ்நாடு ஆதாரத்துடன் இனி கருத்துக்கள் பேச பூக்கள் சூழ்ந்து கனிகள் கனிந்த பூஞ்சோலை ஆகும்.

https://www.facebook.com/savenra/posts/7509169822442209