சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி படத்திறப்பு விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.

1937 ஆம் ஆண்டை முதலாகக் கொண்டு 1989ல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொன்விழாவைக் கொண்டாடினார் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. அதை உறுதிப்படுத்தும் வகையில் பத்தாண்டுகள் கழித்து சட்டமன்றத்தின் பவள விழாவையும், சட்டமன்றப் பேரவையின் வைர விழாவையும் ஒருசேர 1997ல் கொண்டாடினார் கலைஞர்.

தற்போது நடத்தப்படும் விழா, நீதிக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 1921 ஆம் ஆண்டை தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கமாகக் கொண்டிருக்கிறது. சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, 1921 ஜனவரி 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா இன்று (ஆகஸ்ட் 02) கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப் படத்தைச் சட்டப்பேரவையில் திறந்து வைத்தார். இதன்மூலம் சட்டசபையில் 16வது தலைவராக கலைஞர் கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது.

[su_image_carousel source=”media: 25282,25283″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

சட்டசபை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சட்டசபை வளாகம் புதுப்பிக்கப்பட்டு, சட்டசபையின் வெளிப்புறமும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. சட்டசபை நுழைவு வாயிலில் வாழைத்தோரணங்கள் கட்டப்பட்டு அந்த வளாகமே விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.

விழாவையொட்டி 7 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணியில் கமாண்டோ படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக, விழா மேடையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

மேலும், இவ்விழாவில், அமைச்சர்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, அரசு கொறடா, கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை; ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டது தமிழ்நாடு அரசு